மக்களே உஷார்..!! தமிழகத்தில் 30,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு..!!

மக்களே உஷார்..!! தமிழகத்தில் 30,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு..!!

Update: 2022-01-22 04:30 GMT

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 29,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 30,72,666 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 7,038 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 22,810 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 6,83,016 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று கொரோனாவிலிருந்து 21,684 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,48,163 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,87,358 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  ஒரே நாளில் 1,47,054 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,02,90,114 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் நேற்று  ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,145 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Similar News