பாஜக எம்எல்ஏ-வை அரை நிர்வாணமாக்கி தாக்கிய மக்கள்.. பெரும் பரபரப்பு !!
பாஜக எம்எல்ஏ-வை அரை நிர்வாணமாக்கி தாக்கிய மக்கள்.. பெரும் பரபரப்பு !!
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள் பெரியளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நீடித்து வருகிறது. பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் மத்திய பாஜக அரசு மீது கடும் எதிர்ப்பலை வீசுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அபோஹார் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான அருண் நாரங் மாலவுட்டில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் கலந்துகொள்வதற்காக உள்ளூர் தலைவர்களுடன் மாலவுட்டுக்கு வந்த அருண் நாரங்கை திரும்பிச்செல்லக் கோரி அங்கிருந்த விவசாய அமைப்பினர் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். எனினும் எதிர்ப்பை மீறி காரில் இருந்து இறங்கிய அருண் நாரங்கை, விவசாய அமைப்பினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்க முடியாமல் திணறினர்.
இந்த நிலையில், எம்எல்ஏவின் சட்டையை கிழித்து, மை வீசி தாக்கினர். இதனால் நிலைகுலைந்து போன அருண் நாரங் மீண்டும் காரை நோக்கி வேகமாக சென்றார். ஆனால் அவரை விடாமல் துரத்திய விவசாய அமைப்பினர் தாக்குவதற்கு முயற்சித்தனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிந்த போலீசார் அருண் நாரங்கை பாதுகாப்பாக அழைத்துச் சென்று தனியார் குடோனில் அடைத்துவைத்தனர். பின்னர் பெரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி எம்எல்ஏவை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியது. மேலும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். எம்.எல்.ஏ. அருண் நாரங்கை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Punjab BJP MLA thrashed and beaten by Punjabi farmers in malot pic.twitter.com/OQfwIq4vAq
— JasveerSingh Muktsar (@jasveermuktsar) March 27, 2021
newstm.in