நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்கள் திறப்பு.. மத்திய அரசு அதிரடி !!

நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்கள் திறப்பு.. மத்திய அரசு அதிரடி !!

Update: 2021-08-06 20:38 GMT

நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்நலத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், பிரதமரின் பாரதிய ஜன்அவுஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2ஆம் தேதி வரை 8,001 மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. 

2025, மார்ச் மாதத்துக்குள் 10,500 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும். அரசு மருத்துவமனை வளாகங்களில், கடந்த 2ம் தேதி வரை 1,012 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. மக்கள் மருந்தக கடை உரிமையாளர்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மத்திய அரசு சமீபத்தில் அதிகரித்துள்ளது.

கொரோனா சுரக்‌ஷா திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதன்படி வரும் மாதங்களில், கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பாரத் பயோக்டெக் நிறுவனம் மற்றும் 3 அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

உள்நாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம், தடுப்பூசி கொள்முதலுக்கான ஆர்டருக்கு 100 சதவீத தொகையை முன் பணமாக வழங்கியுள்ளது, என அவர் கூறியுள்ளார்.

newstm.in

Tags:    

Similar News