தங்கம் வாங்க சரியான நேரம்!! 37,000 கீழ் குறைந்த தங்கம் விலை !!
தங்கம் வாங்க சரியான நேரம்!! 37,000 கீழ் குறைந்த தங்கம் விலை !!
கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லறை விலையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைகிறது.இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும் என்று நடுத்தர மக்கள் கவலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,680-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, ரூ.4,585-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் குறைந்து ரூ.75,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.