ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: 150 பார்வையாளர்கள் மட்டும், 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என கட்டுப்பாடுகள் விதிப்பு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: 150 பார்வையாளர்கள் மட்டும், 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என கட்டுப்பாடுகள் விதிப்பு

Update: 2022-01-10 16:42 GMT

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என பலரும் கவலையில் இருந்தாலும்  ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து  அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியும் இன்று அதிகாலை நடைபெற்றது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பார்வையாளர்கள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன், அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதுடன், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ளது அவசியம் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெளியூரில் வசிப்பவர்கள் இணையவழியாக காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News