சென்னையில் பெட்ரோல் குண்டு வீச்சு! ரவுடிகளை கொல்ல முயற்சி.. விசாரணையில் திடுக்கிடும் பின்னணி!!

சென்னையில் பெட்ரோல் குண்டு வீச்சு! ரவுடிகளை கொல்ல முயற்சி.. விசாரணையில் திடுக்கிடும் பின்னணி!!

Update: 2020-03-05 14:27 GMT

 

பிரபல ரவுடிகளை தீர்த்து கட்டுவதற்கு பட்டப்பகலில் மற்றொரு ரவுடி கும்பல் வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியும், வடசென்னையைச் சேர்ந்த ஒரு ரவுடியும் பழைய வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு இருவரும் ஒரே காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் எதிரணியினர் பின் தொடர்ந்துள்ளனர். எதிரணியினர் பின்தொடர்வதை காரிலிருந்த ரவுடிகள் தெரிந்துகொண்டனர். அதனால், அவர்கள் ஜெமினி பாலத்தையே இரண்டு முறை சுற்றிவந்துள்ளனர். பிறகு திடீரென ஜெமினி பாலத்திலிருந்து ஒருவழிச்சாலைப் பகுதியில் இறங்கி தப்பிக்க முயற்சி செய்தபோது தான் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை அந்த காரின் மீது ஏரிந்துள்ளனர். குறி தவறியதால் அந்த ரவுடிகள் இருவரும் காரில் தப்பியுள்ளனர். 

சென்னையின் பரபரப்பான சாலையில் மதிய வேளையில் காவல்நிலையம் அருகில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு வந்து சென்னை காவல் ஆணையர் பார்வையிட்டார். மேலும், 4 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
முதற்கட்டமாக அருகாமையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட ஒரு காரை 8 இரு சக்கர வாகனங்கள் பின் தொடர்ந்து செல்வது தெரிந்தது. மேலும் சந்தேகிக்கும் வகையில் கார் நிற்காமல் சென்றுள்ளது. விசாரணை செய்தபோது நான்கு இரு சக்கர வாகன ஓட்டிகளை போலீசார் அடையாளம் கண்டனர். அதில் ஒரு இரு சக்கர வாகனம் போலியான முகவரி உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தண்டையார் பேட்டை மெக்கானிக் ஒருவர் இந்த பைக்கை வேறொருவரிமிருந்து தேவதாஸ் என்பவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். நந்தனம் அரசுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் தேவதாசின் மகன் மகேஷ் இந்த பைக்கை சில மாதங்களாக ஓட்டி வந்துள்ளார். தற்போது தேவதாசின் மகன் மகேஷ், மகேஷின் நண்பர் ஆகாஷ்(17) ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தலைமறைவான இரண்டு மாணவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமறைவான மாணவரின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்பதால் அங்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். 

newstm.in

Tags:    

Similar News