இன்றும் குறைந்த பெட்ரோல், டீசல் விலை!!

இன்று பெட்ரோல் விலை 31காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல் விலை 27 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.48 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Update: 2020-03-10 21:21 GMT

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாறும் , கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பது போல் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றது. 

                                              

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக  குறைந்துள்ளது . இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.சென்னையில் இன்று  பெட்ரோல் விலை 31காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல் விலை 27 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.48 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:    

Similar News