திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை !!

திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை !!

Update: 2021-02-01 22:12 GMT

திருமலை திருப்பதிக்கு சென்றால் வரும் போது லட்டு பிரசாதமாக பெற்றுச் செல்வது வழக்கம்.அந்த லட்டுக்களை வாங்கிச் செல்ல தேவஸ்தானம் பிளாஸ்டிக் கவா்களை ரூ.2 விலையில் வழங்கி  பின்னர் கவரின் விலை ரூ.3 ஆக உயா்த்தியது. தற்போது இந்நிலையில் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்க தேவஸ்தானம் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்திருந்தது. இருந்தாலும்   லட்டு கவருக்கு மட்டும்  மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை. முதலில்  அட்டை பெட்டியில் லட்டை கொண்டு செல்ல முதலில்  முடிவு செய்யப்பட்டு  லட்டில்  உள்ள நெய் அட்டை பெட்டிகளால் உறிஞ்சப்பட்டு லட்டின் தரம் பாதிக்கப்பட்டதால் அந்த முயற்சி உடனடியாகக்  கைவிடப்பட்டது.

தற்போது லட்டு கவருக்கு மாற்றாக சணல் பைகள், காகிதப் பைகள், துணி பைகள் என பல்வேறு விலையில் விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த பைகளின் உட்பகுதியில் நெய் உறிஞ்சப்படுவதை தடுக்க தேவஸ்தானம் ஆயில் காகிதம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் லட்டின் தரமும் அப்படியே பாதுகாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.  துணி பைகள் ரூ.11, ரூ. 9 விலையிலும், காகிதப் பை ரூ. 5 விலையிலும் கிடைத்து வருகிறது. சணல் பைகள் ரூ.15, ரூ. 25 விலையிலும் விற்கப்படுகிறது. பக்தா்கள் தாங்கள் விரும்பும் விலையில் லட்டு பைகளை வாங்கிக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News