பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளது. தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். 

பாடகி ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

இந்த நிலையில், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் அழகிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஸ்ரேயா கோஷல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


newstm.in

Tags: