ப்ளீஸ்… கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! இன்ஸ்டாகிராமில் புதிய வசதி!!

ப்ளீஸ்… கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! இன்ஸ்டாகிராமில் புதிய வசதி!!

Update: 2021-12-08 08:53 GMT

நீண்ட நேரம் இன்ஸ்டாகிராம் செயலியைப் பயனர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் புதிய வசதி ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் பிரபலமான பொழுதுபோக்கு செயலியான  இன்ஸ்டாகிராமுக்கு நாளுக்குநாள் உலகம் முழுவதும் பயனர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. ஒரு நாளின் பெரும் பகுதியை இன்ஸ்டாகிராமில் கழிப்பவர்களும் உண்டு.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியும் புதிய வசதிகளை பயனர்களின் பயன்பாட்டுக்கேற்ப அறிமுகப்படுத்தி வருகிறது. அதனால் அதற்கான மவுசு குறையாமல் நாளுக்கு நாள் கூடி வருகிறது.

அந்த வகையில் நீண்ட நேரம் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் இடையிடையே சிறிது நேரம் இடைவேளை வழங்கும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நீண்ட நேரமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும்  பயனர் இடையே 10 முதல் 30 நிமிடங்கள் வரை இடைவேளை எடுத்துக் கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இதற்கான சோதனை ஓட்டத்தை இன்ஸ்டாகிராம் மேற்கொண்ட நிலையில் அதுகுறித்த தரவுகள் வெளியாகவில்லை. எனினும் இந்த புதிய அம்சத்தை 90 சதவிகித இளம்பருவத்தினர் பயன்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் மேலும் பல நாடுகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News