பெண்களின் உள்ளாடைகளை திருடி இன்பம்.. சைக்கோ திருடனால் கிராம மக்கள் அச்சம் !
பெண்களின் உள்ளாடைகளை திருடி இன்பம்.. சைக்கோ திருடனால் கிராம மக்கள் அச்சம் !
பெண்கள் உள்ளாடைகளை திருடும் சைக்கோ திருடனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் பகத்சிங் சாலையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. அங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதால் அதனை அகற்ற அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதியில் தினமும் ஒரு சைக்கோ இளைஞர் உலா வருவது தெரியவந்துள்ளது. அந்நபர் அங்கு கொடிகளில் காயம் பெண்கள் உள்ளாடைகளை சேகரித்து சென்று வந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் தினமும் உலா வரும் சைக்கோ இளைஞனை பின்தொடர்ந்து நடவடிக்கையை கண்காணித்துள்ளனர்.
அப்போது தான் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சைக்கோ இளைஞர், தினமும் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் சென்று பாழடைந்த கட்டிடத்தில் சேகரித்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த சைக்கோ இளைஞர் தான் திருடி வந்த பெண்கள் உள்ளாடைகளுடன் உல்லாசமாய் இருந்து வந்துள்ளான். அந்த பாழடைந்த கட்டிடத்தில் உள்ள சுவர்களில் பெண்களை ஆபாசமாக வரைந்து அதன் மூலம் சுய இன்பம் அடைந்து வந்ததும் தெரியவந்தது.
சில நாட்களுக்கு பிறகு தான் திருடிய பெண்களின் உள்ளாடைகளை எரித்துவிட்டு மீண்டும் புதிதாக உள்ளாடைகளை திருடிக்கொண்டு வந்து அதனுடன் உல்லாசமாய் இருந்து வருவதை அந்த சைக்கோ இளைஞன் வழக்கமாக கொண்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில நேரங்களில் இரவில், வீதியில் நிர்வாணமாக நடந்து செல்வதாகவும் கண்களில் தென்படும் பெண்களை உல்லாசத்துக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த கிராமவாசிகள் போலீசில் புகார் அளித்தனர்.குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் அந்த சைக்கோ இளைஞர் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in