பிரதமர் மோடியை காணவில்லை.. கூலி தொழிலாளர்கள் கைது.. பரபரப்பு போஸ்டர் !

பிரதமர் மோடியை காணவில்லை.. கூலி தொழிலாளர்கள் கைது.. பரபரப்பு போஸ்டர் !

Update: 2021-05-16 06:13 GMT

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நீடித்து வருகிறது. மேலும் தடுப்பு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் மோடியை கண்டித்து தலைநகர் டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், ‘மோடிஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தீர்கள்?’ என அச்சிடப்பட்டு இருந்தது.
டெல்லியின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களால் தலைநகரில் நேற்று பரபரப்பு நிலவியது. இந்த போஸ்டர்கள் தொடர்பாக நகரின் பல போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து இந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும், கூலிக்கு போஸ்டர் ஒட்டியவர்கள். இந்த போஸ்டரை அச்சடித்ததன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறியும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என எதிர் கட்சிகள் புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது
Newstm.in
Tags:    

Similar News