விஷச் சிலந்தி, தேவாங்கு..! சென்னைக்கு கடத்திவரப்பட்ட 13 அரியவகை உயிரினங்கள்..

விஷச் சிலந்தி, தேவாங்கு..! சென்னைக்கு கடத்திவரப்பட்ட 13 அரியவகை உயிரினங்கள்..

Update: 2020-02-01 15:30 GMT

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட கொடிய விஷமுடைய சிலந்திகள், தவளை, மரப்பல்லி, கீரிப்பிள்ளைகள், பச்சோந்தி, பாலைவனத்தில் வசிக்கக்கூடிய காட்டு எலிகள் உள்ளிட்ட 13 அபூா்வவகை உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைத்து, டிராலி சூட்கேசுக்குள் வைத்து கொண்டு வந்த சென்னையைச் சோ்ந்த இப்ராகீம் ஷா(38) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட இப்ராகீம் ஷா சென்னையில் உள்ள மத்திய வனக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த உயிரினங்களால் வெளிநாட்டு நோய் கிருமிகள் இந்தியாவில் பரவ வாய்ப்பு உள்ளதால், இவைகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதற்கான செலவுத் தொகையை கடத்தலில் ஈடுபட்ட நபரிடமே வசூலிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

இந்த மாதத்தில் மட்டும் இதைப்போல் அபூா்வவகை உயிரினங்கள் தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்படுவது 3 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Tags:    

Similar News