நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவரை அள்ளியது காவல்துறை..!
நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவரை அள்ளியது காவல்துறை..!
நடிகை சனம் ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் அதிகமான நடித்து பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவர் மாடலிங், விளம்பரம் என பிஸியாக உள்ளார்.
சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சனம் ஷெட்டி சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதுடன், அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், ‘இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பிய திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் என்ற மாணவனை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, மாணவர் ராய் ஜான்பாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.