முதலமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகள், எஸ்பி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாசலபிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர், நிதின்கட்கரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களில் சிலர், கட்கரி பிரதமராக வேண்டும் என்று கோஷம் எழுப்பியதாகவும், அதற்கு முதலமைச்சர் பாதுகாவலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

 
அப்போது காவலுக்கு நின்ற குல்லு போலீசாருடனும் முதலமைச்சர் பாதுகாப்புக்கு வந்திருந்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட அது சண்டையாக மாறி உள்ளது. அப்போது குல்லு போலீஸ் சூப்பிரண்டு, முதலமைச்சர் பாதுகாவலரை அறைந்ததாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ பரவி உள்ளது.

இதுபற்றி அறிந்த முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில டி.ஜி.பி. 3 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


newstm.in

Tags: