கல்லூரி மாணவர் மீது சிறுநீர் கழித்த போலீஸ்? – துறைரீதியான விசாரணைக்கு உத்தரவு!!

கல்லூரி மாணவர் மீது சிறுநீர் கழித்த போலீஸ்? – துறைரீதியான விசாரணைக்கு உத்தரவு!!

Update: 2022-01-17 09:53 GMT

முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக சட்டக்கல்லூரி மாணவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதோடு அவரின் முகத்தில் சிறுநீர் கழித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22) தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார்

இந்நிலையில் இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு  கூறினர்.

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறதுஇதையடுத்து காவலரை தாக்க முயன்றதாக கூறி  ரஹீமை காவல்நிலையத்திற்கு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

காவல்நிலையத்தில் போலீசார் ரஹீமை அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது

இது தொடர்பாக  கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம் புகார் அளித்தார். அதில் சம்பவத்தின்போது தான் முகக்கவசம் அணிந்து வந்ததாகவும், ஆனாலும் அபராதம் கட்ட போலீசார் வற்புறுத்தியதாகவும், அடையாள அட்டையை காண்பித்தும் விடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பீரோவில் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட விடாமல் தாக்கினர். இரவு 1 மணியில் இருந்து காலை 11 மணிவரை அடித்து உதைத்தனர் என்றும் தனது முகத்தில் சிறுநீர் கழித்தனர் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே மாணவரை தாக்கியதாக புகாருக்குள்ளான 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளதுமேலும், மேற்கு மண்டல இணை ஆணையர் தலைமையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News