டாஸ் போடவந்த பொல்லார்ட்.. ரோஹித் சர்மா ரசிகர்கள் ஷாக் !!

டாஸ் போடவந்த பொல்லார்ட்.. ரோஹித் சர்மா ரசிகர்கள் ஷாக் !!

Update: 2021-09-19 19:18 GMT

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் ஐபிஎல் 2021 சீசனில் 30ஆவது போட்டியில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 
 
கொரோனா தொற்று பரவல் அபாயத்தால் கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் ஆரம்பமாகி உள்ளன. 

சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்த சீசனில் மோதிய முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றிருந்தது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக பொல்லார்ட் கேப்டன் பணியை மும்பை அணிக்காக கவனிக்கிறார். மும்பை அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சவுரப் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை அணியில் பெரியளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 
 

newstm.in

Tags:    

Similar News