பொங்கல் போனஸ் 7,000 ரூபாய்.. அரசு ஊழியர்கள் கோரிக்கை..!
பொங்கல் போனஸ் 7,000 ரூபாய்.. அரசு ஊழியர்கள் கோரிக்கை..!
ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின்போது தமிழக அரசுத் துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த வருட பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ‘பொதுத் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று தங்களுக்கும் பொங்கல் போனஸாக 7,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னளர்.
இந்தக் கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். பொங்கல் போனஸ் தொடர்பான தங்களது கோரிக்கையை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், பொதுத் துறை ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல், தங்களுக்கும் 7,000 ரூபாய் பொங்கல் போனஸ் வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்’ என்றார்.