பொங்கல் கொண்டாட்டம்.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் !!

பொங்கல் கொண்டாட்டம்.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் !!

Update: 2021-12-23 12:15 GMT

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் வசித்து வரும் வெளிமாநில மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவர். இதற்காக பேருந்து, ரயில்கள் நிலையங்களில் பயணிகள் குவிந்துவருவர். இதனிடையே, எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இருமார்க்கத்திலும் அனைத்து இடங்களுக்கும் முன்பதிவு முடிந்து விட்டது. 

எனவே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகளிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே மேலும் 3 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக நெல்லை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகின்றன. 

சிறப்பு ரயில் ஜனவரி 12ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு திருநெல்வேலி சென்று அடையும். திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை (14ஆம் தேதி) 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
எழும்பூரில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 16ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் ஜனவரி 17ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில்கள் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்பட உள்ளன.

 

newstm.in

Similar News