பொங்கல் பரிசு: ரொக்கத் தொகை கிடைக்குமா? புதிய சுற்றறிக்கை !!

பொங்கல் பரிசு: ரொக்கத் தொகை கிடைக்குமா? புதிய சுற்றறிக்கை !!

Update: 2021-12-23 13:02 GMT

 2022ஆம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது.

பச்சரிசி, வெல்லம், சீனி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இதில் அடங்கும். இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நேற்று புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், எக்காரணம் கொண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் இல்லை என்ற நிலை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், பரிசுத் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்கப்படுவதை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்த சுற்றறிக்கையால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற வார்த்தை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதனால் ரொக்கத்தொகை கிடைக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, ரேசன் அட்டைத்தாரர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. அதேபோல் இந்தாண்டும் தொகை வழங்கவேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News