பொன்னியின் செல்வன் பார்ட் 1 போஸ்டர் வெளியீடு!

பொன்னியின் செல்வன் பார்ட் 1 போஸ்டர் வெளியீடு!

Update: 2021-07-19 21:53 GMT

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்க உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி மூவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் ஷுட்டிங் முதலில் தாய்லாந்தில் நடைபெற்றது. தற்போது கொரோனா காரணமாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. பொன்னியில் செல்வனை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் இயக்குனர் மணிரத்னம் முன்பே கூறியிருந்தார்.

இந்நிலையில், போஸ்டரில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ 2022ல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி உட்பட இந்த படத்தில் நடித்துள்ள திரைப்பிரபலங்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளனர்.


 

Tags:    

Similar News