பிரபல கால்பந்து வீரர் கைது! ரசிகர்கள் அதிர்ச்சி!!

கால்பந்து வீரரான ரொனால்டினோ தன்னுடயை சுயசரிதை புத்தகத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக பராகுவே சென்றார். அப்போது அவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரொனால்டினோவின் பாஸ்போர்ட்டில் பராகுவே குடிமகன் என குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

Update: 2020-03-07 15:53 GMT

பிரேசிலை சேர்ந்த கால்பாந்து வீரர் ரொனால்டினோ பராகுவே நாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கால்பந்து வீரரான ரொனால்டினோ தன்னுடயை சுயசரிதை புத்தகத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக பராகுவே சென்றார். அப்போது அவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரொனால்டினோவின் பாஸ்போர்ட்டில் பராகுவே குடிமகன் என குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோசடி வழக்கில் ரொனால்டினோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஸ்போர்ட் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாஸ்போர்ட்டில் பராகுவே குடிமகன் என்று குறிப்பிட்டிருந்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News