வெண்டிலேட்டர் பற்றாக்குறையால் கொரோனாவுக்கு பிரபல பாடகர் பலி..!

வெண்டிலேட்டர் பற்றாக்குறையால் கொரோனாவுக்கு பிரபல பாடகர் பலி..!

Update: 2021-05-08 10:39 GMT

வெண்டிலேட்டர் பற்றாக்குறை காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் பல்வேறு திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகர் ஜி. ஆனந்த் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து போனது. இதனால் வெண்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது.

ஆனால் அந்நேரம் பார்த்து அவருக்கு மருத்துவமனையில் வெண்டிலேட்டர்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே இருந்தவற்றில் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது.

உடனடியாக பாடகர் ஜி.ஆனந்தின் குடும்பத்தார் சமூகவலைதளங்கள் மூலமாக வெண்டிலேட்டர் உதவி கேட்டு பதிவிட்டனர். ஆனால் உரிய நேரத்தில் உதவி கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

தெலுங்கு மற்றும் தமிழில் பல்வேறு படங்களில் பாடியுள்ள ஜி. ஆனந்துக்கு 64 வயதாகிறது. தெலுங்கில் வெளியான சில படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். பல்வேறு பக்திப் பாடல்களை பாடி ஆடியோவாக வெளியிட்டுள்ளார். பாடகர் ஜி. ஆனந்த் மறைவுக்கு தெலுங்கு திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

Similar News