ஆபாச வீடியோ… ஆசிரியையிடம் எல்லை மீறிய காதலன் கைது!!
ஆபாச வீடியோ… ஆசிரியையிடம் எல்லை மீறிய காதலன் கைது!!
ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவரும் 25 வயது இளம்பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த ராஜ் என்ற நபர் தன்னுடைய ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு பதிவு செய்த அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார், இளம்பெண்ணுக்கு 5 எண்களில் இருந்து வந்த செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது அவற்றில் ஒரு நம்பரை தவிர மற்ற அனைத்து சிம்கார்டு எண்களும் போலி என தெரியவந்தது.
ஒரு சிம் கார்டு மட்டும் தேனி மாவட்ட முகவரியில் இருந்தது தெரிய வந்தது. தேனி மாவட்டம் சென்ற போலீசார் சிம்கார்டு முகவரியில் இருந்த மனோஜ் குமார்(29) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த மனோஜ்குமாரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தனர்.
அப்போது மனோஜ்குமார் தான், ராஜ் என்ற போலியான சமூக வலைதள கணக்கு மூலம் இளம்பெண்ணிடம் பழகி அவரை மிரட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வேலைக்கு செல்லாமல் சொந்த ஊரில் சுற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு முடி முழுவதும் கொட்டி மொட்டை அடித்துக் கொண்டிருந்ததால் அழகான ஆண்களின் புகைப்படத்தை வைத்து ஃபேக் ஐ.டி உருவாக்கி அதன் மூலம் பெண்களிடம் பழகி வந்ததாகவும் தெரிவித்தார்.
அப்படி பல பெண்களிடம் அத்துமீறி ஆபாச புகைப்படங்கள் அனுப்பியுள்ளார். குறிப்பாக ட்ரூ காலரில் ரேண்டம் மொபைல் எண்களை பதிவிட்டு பெண்கள் பெயர் வந்தால், அதன் மூலம் பழகி காதல் பெயரில் பெண்களை ஏமாற்று வந்துள்ளார்.
இதனையடுத்து மனோஜ் குமாரிடமிருந்து 10க்கும் மேற்பட்ட போலி முகவரி சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.
newstm.in