ஆபாச வீடியோ மிரட்டல்..! பெண்களை சித்திரவதை செய்த இளைஞர்!!

ஆபாச வீடியோ உள்ளது என மிரட்டல்.. பெண்களை சித்திரவதை செய்த பட்டதாரி இளைஞர் கைது

Update: 2020-02-17 14:48 GMT

சமூக வலைதளங்களில் பல பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துவிடுவதாக கூறி மிரட்டிய பட்டதாரி இளைஞரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கொம்மனாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (23). பொறியியல் பட்டதாரியான இவர் சமூக வலைத்தளங்கள் மற்றும் தன்னிடம் நட்பாக பழகும் பெண்களை காதல் வலையில் வீழ்த்துவார் என கூறப்படுகிறது. பின்னர் அப்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக தெரிகிறது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் இளம்பெண்களிடம் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் உள்ளதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வேன் எனவும் மிரட்டுவார். இப்படி பல பெண்களுக்கு விக்னேஷ் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இந்நிலையில், விக்னேஷால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விருத்தாசலத்தில் இருந்த விக்னேஷை மத்திய குற்றப்பிரிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Tags:    

Similar News