'போட்ரா வெடியை' திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது மாநாடு..!!

'போட்ரா வெடியை' திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது மாநாடு..!!

Update: 2021-11-24 23:12 GMT

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’.சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்கிற பெயரில் நடித்துள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். 

இந்நிலையில் மாநாடு படத்தின் ரிலீசை தள்ளி வைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று மாலை அறிவித்தார்.இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்தது.

இந்தச் சூழலில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றைத் தனது ட்விட்டரில் பகிர்ந்ததுள்ளார்.அனைவருக்கும் நன்றி, நாளை திட்டமிட்டப்படி மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


 

Tags:    

Similar News