'சக்திவாய்ந்த முதலமைச்சர்'... மு.க.ஸ்டாலினை புகழ்ந்த தமிழக ஆளுநர் !
'சக்திவாய்ந்த முதலமைச்சர்'... மு.க.ஸ்டாலினை புகழ்ந்த தமிழக ஆளுநர் !
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு தலைவர்கள், பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்தன. இதனிடையே, தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் நியமத்தின் போது பாஜக உள்ளிட்ட கட்சிகள் இனி திமுக அரசுக்கு தலைவலி தான் என கூறிவந்தனர்.
இந்த நிலையில், சக்திவாய்ந்த முதலமைச்சரே என கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார்.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘சக்திவாய்ந்த முதலமைச்சரே...’ என்று உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று என்ன சாதித்தீர்களோ, அது உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் சாத்தியமாகி உள்ளது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு எப்போதும் உங்களை உயர்த்தும் என தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கல்வி, சேவை, ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா புதுப்புது வகையில் வந்து கொண்டிருப்பதால், நோய் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும் ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
newstm.in