கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த கர்ப்பிணி மனைவி! காரணம் இதுதான்!!

கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த கர்ப்பிணி மனைவி! காரணம் இதுதான்!!

Update: 2022-01-15 08:42 GMT

விழுப்புரம் அருகே கணவரை கர்ப்பிணி மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் விளந்தை கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான சந்தோஷ் 10 ஆண்டுகளுக்கு முன்பாக சுரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கு சண்டை ஏற்பட்டு சுரேகா அவரது தயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதனிடையே சுரேகா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் அடைந்து கணவர் சந்தோஷ் கருவை கலைக்க கூறி வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, சண்டையாகியுள்ளது.

அப்போது திடீரென காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வந்து சுரேகாவைக் கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது சுரேகா சந்தோஷிடம் பறித்துக் கொண்டு கணவர் சந்தோஷின் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் குத்தி உள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in

Similar News