ஓடும் ரயிலில் இருந்து தவறிவிழுந்த கர்ப்பிணி.. ஒரு நொடியில் காப்பாற்றிய ரயில்வே காவலர் !! வீடியோ

ஓடும் ரயிலில் இருந்து தவறிவிழுந்த கர்ப்பிணி.. ஒரு நொடியில் காப்பாற்றிய ரயில்வே காவலர் !! வீடியோ

Update: 2021-10-19 18:15 GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்யாண் ரயில் நிலையம் பிரதான ரயில் நிலையமாக உள்ளது. உள்ளூர் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்லவும் அந்த ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் அந்த ரயில் நிலையம் கூட்டமாகவும் பரபரப்பாகவும் காணப்படும்.

இந்த நிலையில், நேற்று அந்த ரயில் நிலையத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த ஒரு ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் அவசரமாக கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்போது அவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் உள்ள இடைவெளியில் நிலைதடுமாறி விழுந்தார். அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த ரயில்வே கான்ஸ்டபிள் விரைந்து சென்று கர்ப்பிணிப் பெண்ணை கீழே விழாமல் காப்பாற்றினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இந்நிலையில், மும்பை மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர், தனது டுவிட்டரில், இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதேநேரத்தில், பிளாட்பாரத்தில் விழ இருந்த கர்ப்பிணி பெண்ணை சட்டென காப்பாற்றிய ரயில்வே போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


newstm.in

Tags:    

Similar News