பிரேம்ஜி நடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பிரேம்ஜி நடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

Update: 2021-07-04 21:44 GMT

நடிகர்,பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி அமரன். இவர் சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தில் அவரின் நண்பனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார்.

பரணி ஜெயபால் இயக்கத்தில் நடிகர் பிரேம்ஜி கதநாயகனாக நடிக்கும் படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’. ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி தயாரிக்கும் இப்படத்தில், பிரேம்ஜியுடன் எஸ்.பி.பி.சரண், நாஞ்சில் சம்பத், தேவதர்சினி, மீனாட்சி தீக்சித் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதில் நடித்திருப்பதுடன், இசையமைக்கவும் செய்துள்ளார். பாடல்களை பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தின் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

Full View

Tags:    

Similar News