12 ஒன்றிய அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!!

12 ஒன்றிய அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!!

Update: 2021-07-08 05:50 GMT

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய ஒன்றிய அமைச்சர்களாக தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் பதவியேற்க உள்ளனர்.

ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த ஹர்ஷ வர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் 12 பேர், அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டம் மற்றும் மின்னணுவியல் மற்றும் ஐ.டி. - ரவிசங்கர் பிரசாத், மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்றம்  -பிரகாஷ் ஜவடேகர், மத்திய தொழிலாளர் நலத்துறை - சந்தோஷ் கங்குவார், மத்திய சுகாதாரத்துறை - ஹர்ஷ் வர்தன், கல்வி - ரமேஷ் பொக்ரியால், ரசாயனத்துறை -சதானந்த கவுடா, மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ,குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை - தபாஸ்ரீ சவுத்ரி, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ரத்தன் லால் கடாரியா, ராவ் சாகேப் தான்வி படேல், பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Tags:    

Similar News