புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. 

திடீர் திருப்பமாக திமுக எம்.எல்.ஏ.வும் ராஜினாம செய்ததால், ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14ஆக குறைந்தது. எதிர்கட்சிகளின் பலமும் 14 ஆக சமநிலையில் இருந்ததால், சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வரின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் தமிழிசை ஏற்றுக் கொண்டு, மத்திய அரசுக்கு புதுவையின் அரசியல் நிலவரம் குறித்து அறிக்கையாக அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Tags: