பிரதமர் அவர்களே எங்களுக்கும் பிரச்சாரம் செய்யுங்கள்.. திமுக வேட்பாளர்கள் கூட்டாக கோரிக்கை !!

பிரதமர் அவர்களே எங்களுக்கும் பிரச்சாரம் செய்யுங்கள்.. திமுக வேட்பாளர்கள் கூட்டாக கோரிக்கை !!

Update: 2021-04-02 19:06 GMT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து பாஜக, காங்கிரஸ் தேசியத் தலைவர்கள் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

பிரதமர் மோடி தாராபுரம், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவரது பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துதள்ளது. இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் சிலர் தங்களுக்கு பிரச்சாரம் செய்ய மோடிக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக வேட்பாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  


அந்த பதிவில், தயவு கூர்ந்து எங்கள் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், நான்தான், அந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்துப்போட்டியிடும் திமுக வேட்பாளர் என்றும், உங்கள் தேர்தல் பிரசாரம் மூலம் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு, ஒருவர், இரண்டு பேரல்ல, எழும்பூர் தனித் தொகுதி திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன், தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜா, தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பல்லாவரம் எம்எல்ஏவும் தற்போதைய வேட்பாளருமான இ. கருணாநிதி ஆகியோர் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் இந்த கோரிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.


மேலும், திமுக வேட்பாளர்கள் எஸ்.எஸ். அன்பழகன், செல்வபெருந்தகை, ஒய். பிரகாஷ், சி.வி.எம்.பி. எழிலரசன், சிவகாமசுந்தரி, அம்பேத் குமார், எ.வ. வேலு, ஆர். காந்தி, கயல்விழி செல்வராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, க. சுந்தர், ஆர். பாலு உள்ளிட்டோரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதேக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.  
 


வெறும் பதிவாக  மட்டுமல்லாமல், இந்த சுட்டுரைப் பதிவுகளை பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் டேக் செய்துள்ளனர். முன்னதாக பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்தால் அது திமுகவுக்கு தான் சாதகம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
 

newstm.in

Tags:    

Similar News