3ஆவது முறையாக பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.. கனடாவில் சாதனை கொண்டாட்டம் !!

3ஆவது முறையாக பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.. கனடாவில் சாதனை கொண்டாட்டம் !!

Update: 2021-09-21 19:31 GMT

 கனடா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பிரதமராகியிருக்கிறார்

கனடா பாராளுமன்றம் கலைக்கப்பட்டு செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஜஸ்டின் ட்ருடோ (லிபரல் கட்சி), எரின் ஓடூல் (கன்சர்வேட்டிங் கட்சி) ஆகியோர் மல்லுக்கட்டினர்.

கனடா பாராளுமன்ற தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. உடனே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்றது. இதனால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை பெற்றது. பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் அடுத்த 4 ஆண்டுகள் சிறுபான்மை அரசின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார்.
இந்நிலையில் தனது வெற்றி குறித்து ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி கனடா. நீங்கள் வாக்களித்தமைக்கும். லிபரல் கட்சியின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும் மிக்க நன்றி. வளமான எதிர்காலத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நாம் கனடாவை முன்னோக்கி அழைத்துச் செல்லப் போகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

 இதனால், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக பிரதமராகயிருக்கிறார். கனடா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பிரதமராகியிருக்கிறார். ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 49 வயதாகிறது. 2015ல் ஆட்சிக்கு வந்த ட்ரூடோ 6 ஆண்டுகளில் மூன்றாவது பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.

கொரோனாவை ஒழித்தல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை சமாளித்தல், அனைவருக்கும் வீட்டுவசதி, துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியன தேர்தலில் முக்கியப் பிரச்சினைகளாக எதிரொலித்தன. கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒன்டோரியோவில் சிலர் ட்ரூடோ மீது கற்களை வீசினர். இதனால் ட்ரூடோவின் செல்வாக்கு சரிந்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. இருப்பினும் அத்தனை கணிப்புகளையும் முறியடித்து ட்ரூடோ வெற்றி பெற்றுள்ளார்.  


newstm.in

 
 

Tags:    

Similar News