தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Update: 2021-03-23 12:03 GMT

தமிழகத்திலும், புதுவையிலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வருகிற 30ம் தேதி தமிழகம் வருகிறார். 

கடந்த மாதம் 25ம் தேதி புதுச்சேரிக்கு வந்திருந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்நிலையில், வருகிற 30ம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, புதுச்சேரியில் AFT மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.  ஏப். 2ம் தேதி மதுரை, நாகர்கோவிலில் பிரதமர் மோடி வாக்குசேகரிக்க உள்ளார்.  பிரதமர் மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். 

Tags:    

Similar News