பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் !!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் !!

Update: 2021-03-30 07:03 GMT

பிரதமர் மோடி பரப்புரைக்காக இன்று தமிழகம் வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்குவதால் பரப்புரை மேற்கொள்ள தேசியத் தலைவர்கள தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி ஆகியோர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டனர்.

அதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்னும் ஒருவாரக்காலம் கூட முழுமையாக பிரச்சாரத்திற்கு இல்லாததால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று பரப்புரைக்காக தமிழகம் வர இருக்கிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பிரதமரின் வருகையையொட்டி அப்பகுதியில் போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரை தொடர்ந்து, பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News