சிக்கி திணறிய பிரதமர் மோடி.. கலாய்க்கும் ராகுல்காந்தி, இணைய வாசிகள்- வைரல் வீடியோ !!

சிக்கி திணறிய பிரதமர் மோடி.. கலாய்க்கும் ராகுல்காந்தி, இணைய வாசிகள்- வைரல் வீடியோ !!

Update: 2022-01-18 20:15 GMT

உலக பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் மாநாடு சுவிட்சலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் காணொலி மூலம் பங்கேற்று பேசி வருகின்றனர். நேற்று இரவு மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது டெலிபிராம்டர் கருவி திடீரென பழுதானதால் பிரதமர் நரேந்திர மோடி சில நிமிடங்கள் தயங்கித் திணறினார். 

சில நொடி தடுமாற்றத்திற்கு பிறகு சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி நேரலையில் இருந்த உலக பொருளாதார ஊட்டமைப்பு நிர்வாகியிடம் தனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? என்று கூறி நிலைமையை ஓரளவுக்கு சமாளித்தார். இதனையடுத்து டெலிபிராம்டர் கருவி சரியானதும் தனது சிறப்புரையை பிரதமர் தொடர்ந்தார். சர்வதேச நேரலை நிகழ்வு ஒன்றில் டெலிபிராம்டர் கருவி பழுதானதால் பிரதமர் உரை தடைபட்டது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் இணைய செயற்பாட்டாளர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

அந்த வீடியோவை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தான் அன்றே சொன்னேனே, பிரதமர் மோடியால் டெலிப்ராம்டர் இல்லாமல் பேசவே முடியாது என்று. 'டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ராகுல் காந்தி ஏற்கெனவே ஒரு பேட்டியில் மோடியால் டெலிப்ராம்ப்டர் இல்லாமல் பேசவே முடியாது எனக் கூறியதும். அடுத்ததாக நேற்றைய மாநாட்டில் பிரதமர் மோடி ப்ராம்ப்டர் வேலை செய்யாததால் திணறியதும் இடம் பெற்றிருந்தது.
இது இருக்கட்டும் பிரதமரின் 'டெலிபிராம்ப்டர்' கருவி என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். 1960-களில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்தக் கருவியை அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் அதிபர்கள் பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் இதை செய்தி வாசிப்பாளர்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.  


ஆனால், பிரதமர் மோடி பயன்படுத்துவது சில மாதங்களுக்கு முன் தயாரித்து வெளியான அதிநவீன வகையாகும். இரு கண்ணாடிகளால் இணைக்கப்பட்ட இந்தக் கருவியானது சுமார் ஒரு அடி உயரம் மற்றும் முக்கால் அடி அகலத்தில் அமைந்திருக்கும். அதை பேசும் மேடையில் நின்றால் தெளிவாக தெரியும்படி மிகவும் மெல்லிய உயரமான கம்பியில் பொருத்தி விடுகிறார்கள். பிறகு, எலக்ட்ரானிக் கருவியான அதை கணினியுடன் இணைத்து 56 முதல் 72 அளவுகளிலான பதிவான எழுத்துருக்களில் ஓட விடுகிறார்கள்.

அதை மோடி நின்றபடி பார்த்து பேச, பேச எழுத்துகள் கீழ் இருந்து மேலாக நகர்ந்தபடி இருக்கும். பார்ப்பவர்களுக்கு மோடி, தம் முன் அமர்ந்துள்ளவர்களை பார்த்து பேசுவது போல் இருக்கும். ஏனெனில். முன்புறம் இருந்து மேடையை பார்ப்பவர்களுக்கு டெலிபிராம்ப்டரில் ஊடுருவியபடி மோடியின் முகம் தெளிவாக தெரியும். இந்தக் கருவியை பிரதமர் மோடி பயன்படுத்துவதை எளிதாகக் கண்டுபிடிக்காமல் இருக்க காரணம் அதன் அமைப்பே காரணம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.


newstm.in

Similar News