தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சி தரும் பிரதமர் மோடி!
தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சி தரும் பிரதமர் மோடி!
தமிழகத்திற்கு பரப்புரை மேற்கொள்ள வரும் பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை என்பதால் பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திருக்குறள், ஆத்திச்சூடி என அவற்றில் இருக்கும் கருத்துகளை பேசி தமிழக மக்களை கவர்ந்து வருகின்றனர்.
அதே போல் வட மாநிலத் தலைவர்கள் பலரும் தமிழ் பேச முயற்சி செய்து பரப்புரை மேற்கொள்வது வழக்கம். பிரதமர் தொடங்கி அமித்ஷா, நட்டா, ராகுல்காந்தி என தலைவர்கள் பலரும் தமிழில் வணக்கம் சொல்லி உரையை தொடங்குவார்கள்.
அந்த வகையில் தமிழகத்திற்கு பரப்புரை மேற்கொள்ள வரும் தலைவர் தமிழில் பேசி வாக்குகளை கவருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் அதற்கும் ஒருபடி மேலே போய், தமிழ் சினிமா பாடல் ஒன்றை பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக அதிமுக கூட்டணியில் களம் காண்கிறது. எனவே அதிமுக வாக்காளர்களை கவரும் வகையில் எம்ஜிஆர் – ஜெயலலிதா பாடல் ஒன்றை பிரதமர் மோடி பாட இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் எம்ஜிஆர் – ஜெயலலிதா பாடல் ஒன்றை தேர்வு செய்து நேரம் ஒதுக்கி பாடலை மனப்பாடம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் தமிழக மக்கள் இதுபோன்ற தேர்தல் நேரத்து வித்தைகளை நன்கு அறிந்தவர்கள். அதனால் பிரதமர் மற்றும் பாஜகவினரின் தற்காலிக தமிழ்பற்று தேர்தலில் பளிக்குமா என்பதை மே 2ஆம் தேதி தெரிவித்துவிடுவார்கள்.
newstm.in