பிரதமர் மோடி படம் இடம்பெறாது.. மத்திய அரசு அறிவிப்பு..!
பிரதமர் மோடி படம் இடம்பெறாது.. மத்திய அரசு அறிவிப்பு..!
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக பொதுமக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
எனவே, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாது என்றும், இதற்காக கோவின் இணையதளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.