பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து.. டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு..!
பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து.. டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு..!
நாட்டின் 73-வது குடியரசு தின விழா வருகிற 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டில்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஜனாதிபதி மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
குடியரசு தின விழாவையொட்டி டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டில்லி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தைச் சேர்ந்த குழுக்களிடம் இருந்து இந்த அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் பதவியில் இருக்கும் பிரமுகர்களை குறி வைத்தும், பொதுக்கூட்டங்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் நெரிசலான இடங்களையும் இலக்காக வைத்து உள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் எதிர்ப்பு குழுக்கள் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடியரசு தின விழாவில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.