விபத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் வேகத்தில் மோதிய தனியார் பேருந்து - 4 பேர் பலி

உளுந்தூர்ப்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மற்றும் கார் மீது ஆம்னி பேருந்து மோதியதில் நான்கு பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-01-20 17:30 GMT

உளுந்தூர்ப்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் நான்கு பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த ஐசக் என்பவர் தனது காரில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் மோதினார். இதையடுத்து ஐசக் காரை நிறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

                                                  

அப்போது, அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ஐசக் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
 

newstm.in

Tags:    

Similar News