மும்பையில் ஐபில் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்? ரத்தாக வாய்ப்பு !!

மும்பையில் ஐபில் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்? ரத்தாக வாய்ப்பு !!

Update: 2021-04-03 16:47 GMT

ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மும்பை வான்கேடே மைதானத்தில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துபாயில் நடைபெற்றது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று மத்தியில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. எனினும் இப்போட்டிகளை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மும்பை வான்கேடே மைதானத்தில் பணிபுரியும் கள ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 19 ஊழியர்களுக்கு கடந்த வாரம் செய்யப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 5 பேருக்கு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில், தொடர்ந்து ஊழியர்களுக்கு தொற்று அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் அனைவரும் உள்ளதால்  போட்டிகளை வேறு மைதானத்திற்கு மாற்றவோ அல்லது ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News