இன்று சென்னை ரிசர்வ் வங்கி முன்பு போராட்டம்..!!

இன்று சென்னை ரிசர்வ் வங்கி முன்பு போராட்டம்..!!

Update: 2022-01-27 05:00 GMT

குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்கவில்லை என்ற  விவகாரம் வெளியானது. அங்கே இருந்த செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவு இல்லையே என்று பதில் கேள்வி எழுப்பினார்கள். தமிழ்நாடு அரசு ஆணை பற்றி மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மழுப்பலாகப் பேசி கலைந்து விட்டனர் அதிகாரிகள். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.

இதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ”சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது என ஊழியர்கள் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது; இதனை கண்டித்து இன்று  (ஜன 27) காலை ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும” என்றும் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

Similar News