தனியாக வரும் இளம்பெண்களுக்கு 'முத்தம்' கொடுக்கும் சைக்கோ! ரயில்நிலையத்தில் பரபரப்பு!

தனியாக செல்லும் இளம்பெண்களுக்கு 'முத்தம்' கொடுக்கும் சைக்கோ..!

Update: 2020-02-07 17:05 GMT

மும்பையில் மாதுங்கா ரயில் நிலையத்தில் பெண்களை நோட்டமிட்டு சைக்கோ நபர் நடத்தும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மாதுங்கா ரயில் நிலையத்தில் ஆளில்லாத நேரத்தில் நடைமேடையில் நடந்து சென்று போன ஒரு இளம்பெண்ணிடம் அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். வெள்ளை சட்டை அணிந்தபடி, அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து வந்த அந்த இளைஞர் அந்தப் பெண் சற்றும் எதிர்பாராத வகையில் அந்தப் பெண்ணின் அருகே சென்று முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

 இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரித்தப்போது பல இளம்பெண்களிடம் அந்த இளைஞர் இவ்வாறு செயல்பட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பல திருட்டு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர் என்று தகவல் தெரிய வந்ததை அடுத்து போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் அந்த சைக்கோ நபரை விரைவில் கைது செய்ய வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

Tags:    

Similar News