சைக்கோ போராசிரியரின் ஒருதலைக் காதல், மாணவி கடத்தல், எலும்புக்கூடு, மண்டை ஓடு செட்டப்!

ஒரு தலைக்காதலால் மாணவியை கடத்தி திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்த கல்லூரி போராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். அப்போது உதவிப் பேராசிரியர் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

Update: 2020-03-01 12:39 GMT

ஒரு தலைக்காதலால் மாணவியை கடத்தி திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்த கல்லூரி போராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். அப்போது உதவிப் பேராசிரியர் தீரங்குல கிருஷ்ண மோகன்  என்பவர் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் மாணவி பேராசிரியரின் காதலை ஏற்கவில்லை. கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாணவி பெங்களூரு சென்று விட்டார். அங்கும் துரத்திச் சென்ற பேராசிரியர் தன்னை காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்துள்ளார். 


இந்த விஷயத்தை மாணவி வீட்டில் சொல்லவே, பெற்றோர் அப்பெண்ணை கடப்பாவில் உள்ள வீட்டிற்கே அழைத்து சென்று விட்டனர். இந்நிலையில் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பேராசிரியர் கிருஷ்ண மோகன், புர்கா அணிந்தபடி வீட்டுக்குள் நுழைந்து, அந்த புர்காவை அப்பெண்ணுக்கு அணிவித்து கடத்திச் சென்றுள்ளார்.


இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் சமையலறையில் எலும்புக்கூடு, மண்டைஓடு, கடத்தப்பட்ட பெண்ணின் துணி ஆகியவை இருந்தன. மேலும் கேஸ் சிலிண்டர் திறக்கப்பட்டு அதற்கு அருகில் மெழுகுவத்தி எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக கேஸ் கசிவதைச் சரி செய்தனர்.


பெண்ணின் பெற்றோர் மூலம் கிருஷ்ண மோகன் குறித்து அறிந்து கொண்ட காவல் துறையினர், அவரது செல்போன் சிக்னலை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணைக் கண்டு பிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைக்கப்பட்டது. ஒரு குழு நெல்லூரிலும், மற்றொரு குழு தமிழகத்தின் வேலூரிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது.

அப்போது, வேலூர் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட பெண்ணுடன் இருந்த கிருஷ்ண மோகனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிவந்தன. பெண்ணை கடத்திய பிறகு கேஸ் திறந்து விட்டு வெடிக்கச் செய்யலாம் என்பதே அவரது திட்டம். அதற்காக தான் கேஸ் சிலிண்டரை திறந்து, மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து விட்டு வந்தார். 


கேஸ் வெடித்து பெண் இறப்பது போலவும், அவருடைய துணி, எலும்புக்கூடு, மண்டை ஓடு அங்கு கிடப்பது போலவும் சமையலறையில் செட் செய்திருந்தார். விசாரணைக்கு பிறகு அவர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 
 

newstm.in

Tags:    

Similar News