காவலாளியை கொடூரமான முறையில் கொன்ற சைக்கோ! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
அதிகாலை 2 மணியளவில் வணிக வளாகத்திற்கு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், முதல் தளத்தில் பணியில் இருந்த காவலாளி செந்தில்குமார் மீது பெரிய கல்லை போட்டுள்ளார். பிறகு காவலாளியிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு அங்கு இருந்து தப்பிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் காவலாளி ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் வணிக வளாகத்திற்கு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், முதல் தளத்தில் பணியில் இருந்த காவலாளி செந்தில்குமார் மீது பெரிய கல்லை போட்டுள்ளார். பிறகு காவலாளியிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு அங்கு இருந்து தப்பிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொணடனர்.
விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ராஜ்குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு சேலம் மற்றும் கரூரில் நடந்த 5 கொலைகளில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சி காண்போரை அச்சம் கொள்ள வைக்கிறது.
newstm.in