மாணவியை 15 நொடியில் 8 முறை கத்தியால் குத்திய சைக்கோ இளைஞன்!!

மாணவியை 15 நொடியில் 8 முறை கத்தியால் குத்திய சைக்கோ இளைஞன்!!

Update: 2021-12-23 06:45 GMT

பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபரை திட்டியதன் காரணமாக எட்டாம் வகுப்பு மாணவியை அந்த இளைஞர் 8 முறை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மஞ்சகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் பொதுவெளியில் இழுத்து பிடித்து கத்தியால் குத்தி தாக்கும் கொடூரமான வீடியோ வெளியாகியுள்ளது.

பிரதாப்புர் கிராமத்தில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பள்ளிக்கு வரும் போதும் வீடு திரும்பும் போதும் அதே கிராமத்தைச் சேர்ந்த குட்டா (gudda) என்ற நபர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்றும் குட்டா அச்சிறுமியை தொந்தரவு செய்திருக்கிறார். அப்போது தடுத்த சிறுமியை ஆத்திரத்தில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து வெறும் 15 விநாடியில் 8 முறை குத்தியிருக்கிறார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து அந்த கொலையாளியை மடக்கிப் பிடித்தனர். கூட்டம் கூடியதும் குட்டாவும், அவருடன் வந்த நபரும் தப்பிச் சென்றனர். கத்திக்குத்துக்கு ஆளான சிறுமியை அருகே உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குட்டாவை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

newstm.in

Similar News