பொதுமக்கள் அதிரடி.. பாஜக எம்எல்ஏவை கழிவு நீரில் நடக்க வைத்தனர்..!

பொதுமக்கள் அதிரடி.. பாஜக எம்எல்ஏவை கழிவு நீரில் நடக்க வைத்தனர்..!

Update: 2021-07-31 17:05 GMT

உத்தரப்பிரதேசத்தில், தங்கள் கிராமத்தின் அவல நிலையை உணர்த்த பாஜக எம்எல்ஏவை பொதுமக்கள் கழிவு நீரில் நடக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தற்போது உள்ள எம்எல்ஏக்கள் சுறுசுறுப்பாக மக்களைச் சந்தித்து வருகின்றனர்.



இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் கபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கமல் மாலிக் என்பவர் தனது தொகுதிக்கு உட்பட்ட தோல்பூர் என்ற கிராமத்திற்கு பாதயாத்திரையாகச் சென்றார். அங்கு அவரை முற்றுகையிட்ட கிராம மக்கள், அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, தங்கள் கிராமத்தின் அவலநிலையை அவருக்கு உணர்த்துவதற்காக, வீதியில் தேங்கியிருந்த கழிவு நீரில் வெறும் கால்களால் நடந்து போகும் படி அவரை கட்டாயப்படுத்தினர். மக்கள் இட்ட கட்டளையை தட்ட முடியாத எம்எல்ஏ கமல் மாலிக், வேறு வழியின்றி அதில் நடந்து சென்றார்.

Tags:    

Similar News