பொதுமக்கள் அச்சம்.. புதுச்சேரியில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு..!
பொதுமக்கள் அச்சம்.. புதுச்சேரியில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு..!
புதுச்சேரியில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 714 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,271 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 236 பேர், வீடுகளில் 14 ஆயிரத்து 57 பேர் என மொத்தம் 14 ஆயிரத்து 293 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 724 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லாஸ் பேட்டையைச் சேர்ந்த 52 வயது ஆண், அரியாங்குப்பம் சண்முகாநகரைச் சேர்ந்த 38 வயது ஆண், பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் என 3 பேர் உயிரிழந்தனர்.
அதுபோல், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கம்பன் நகரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியும், காரைக்காலில் நிரவியைச் சேர்ந்த 36 வயது வாலிபரும் உயிரிழந்தனர். இதன்மூலம், இன்று ஒரே நாளில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,921 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் தொற்று பரவல் 26.96 சதவீதமாகவும், குணமடைவது 89.80 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 528 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,004 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 516 பேரும் செலுத்திக் கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 29 ஆயிரத்து 928 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.