பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே.. பிரதமர் மோடி சூசகம் !
பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே.. பிரதமர் மோடி சூசகம் !
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ஆவது அலை அச்சுறுத்தி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. மேலும், கொரோனா தடுப்பூசியும் மருந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல மாநிலங்கள் புகார் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றிரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுத்து வந்திருக்கிறது. கொரோனா 2-ஆவது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முடிறியடிக்க இயலும் என நம்புகிறேன்.
எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம்.கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை ஒரு புயலை போல நாடு முழுவதும் வீசி வருகிறது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பக்கம் நாம் துணை நிற்க வேண்டும் என கூறினார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல், முடிந்தவரை வீட்டிலேயே இருந்து பணியாற்ற முன்வர வேண்டும். பொதுமுடக்கத்தை அமல்படுத்தும்போது மாநில அரசுகள் கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும் என்றார்.
பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே அரசின் முயற்சி. தைரியத்தையும் அனுபவத்தையும் வைத்து மட்டுமே கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முடியும். கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அதிகரிப்பதன் மூலமும், கூட்டு முயற்சியாக செயல்படுவதன் மூலமும் நாடு முழுவதும் முழு முடக்கம் வருவதைத் தடுக்க முடியும் என தெரிவித்தார்.
newstm.in